LOADING

Type to search

உலக அரசியல்

பிரபல பைக்கர் டாட்டியானா ஓசோலினா விபத்தில் பலி!

Share

ரஷ்யாவின் பிரபல பைக்கர் டாட்டியானா ஓசோலினா விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய பைக்கர் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு மிக்க டாட்டியானா ஓசோலினா என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் துருக்கியிலுள்ள மிலாஸ்-சேக் நெடுஞ்சாலையில் தனது பைக்கில் நண்பர்களுடன் சென்றுக் கொண்டுள்ளார். அப்போது இவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து லோரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டாட்டியானா ஓசோலினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, டாட்டியானா ஓசோலினாவுடன் சென்ற இரண்டு நண்பர்கள் இந்த விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டில் டாட்டியானா ஓசோலினா ஆண்டின் சிறந்த மோட்டோபிளாகர் மற்றும் 2024ம் ஆண்டு இந்த ஆண்டின் சிறந்த பிளாகர் என்றும் கௌரவிக்கப்பட்டார். அவரது இறுதி சமூக ஊடக பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.