LOADING

Type to search

சினிமா

‘ராயன்’ திரைப்படத்தின் முதல் நாள் ரூ.15 கோடி வசூல்?

Share

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதன்காரணமாக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அமலமோதியது. இந்த நிலையில், ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.15 கோடியும், வெளிநாடுகளில் ரூ.5.50 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன்படி, உலகளவில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.