LOADING

Type to search

உலக அரசியல்

என்னை தேர்ந்தெடுத்தால்… இனி எப்போதும் வாக்களிக்க வேண்டாம் – டிரம்ப் பரபரப்பு பிரசாரம்

Share

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும் துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு (59) தனது முழு ஆதரவை அளிப்பதாக ஜோ பைடன் தெரிவித்தார். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், என்னை தேர்ந்தெடுத்தால், நீங்கள் இனி எப்போதும் வாக்களிக்க வேண்டியதில்லை என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரையில் நடந்த பிரசாரத்தில் கிறிஸ்தவர்களிடையே உரையாற்றிய டிரம்ப், “நான் கிறிஸ்தவர்களை நேசிக்கிறேன். நான் ஒரு கிறிஸ்துவன். கிறிஸ்தவர்களே, வெளியே வந்து வாக்களியுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள், நீங்கள் மீண்டும் வாக்களிக்க தேவையில்லை. நாங்கள் சரி செய்துவிடுவோம், அது உங்களுக்கே தெரியும்” என்று அவர் கூறினார்.