LOADING

Type to search

இந்திய அரசியல்

நெல்லையின் புதிய மேயராக கிட்டு தேர்வு

Share

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்தார். இந்த சூழலில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் கிட்டுவை எதிர்த்து திமுகவின் அதிருப்தி கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டார். இதில் கிட்டு 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதையடுத்து நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.