இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் மற்றும் விமான சேவை ரத்து!
Share
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு இயக்கப்பட்ட ரயில் சேவை மற்றும் விமான சேவையை இந்திய அரசு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பான வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்துள்ளார். இந்நிலையில், வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவையை ரத்து செய்யப்படுவதாக இந்தியா ரயில்வே அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து டாக்காவிற்கு செல்லும் கொல்கத்தா மைத்ரி விரைவு ரயில் கடந்த ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே முன்னதாக அறிவித்து இருந்தது. அதேபோல, வங்கதேசத்தில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் இயக்க திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.