LOADING

Type to search

இந்திய அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

Share

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயின் கைது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

   டில்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, விசாரணை நீதிமன்றம் ஜூன் 20ம் தேதி ஜாமின் வழங்கியது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

ஜூலை 12ஆம் தேதி, பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிபிஐ அவரை கைது செய்தது. சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த நிலையில் சிபிஐ கைது நடவடிக்கையை ரத்து செய்ய மறுத்த டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சிரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.