கவிதா ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
Share
டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்-“ அமைச்சர் சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 11ம் தேதி டில்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து கவிதா மீது கடந்த ஜூன் 6-ந்தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்குகளில் ஜாமீன் மறுத்த டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வதான் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.