LOADING

Type to search

இந்திய அரசியல்

சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசிய கொடி

Share

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கீழரத வீதியில் உள்ள 142 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது. நடராஜர் கோவில் சித் சபையில் முதற்கால பூஜை நடைபெற்று முடிந்த பின்னர் தேசியக் கொடியானது நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க பொது தீட்சிதர்கள் செயலர் வெங்கடேச தீட்சதர் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ராஜ கோபுரத்தில் கொடி யேற்றப்பட்டது. சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா வருடத்திற்கு இரண்டு முறை இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ் கோபுரத்தில் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.