LOADING

Type to search

உலக அரசியல்

ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் – அமெரிக்க நீதிமன்றம்

Share

கடந்த 2008-ம் ஆண்டு மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடா தொழிலதிபர் தஹவ்வூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து பயங்கரவாதி ராணா அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அமெரிக்கா- இந்தியா இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தம் ராணாவை நாடு கடத்த அனுமதிக்கிறது. எனவே ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.