LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆளுனர் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா மனு தாக்கல்

Share

ஆளுனர் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) முறைகேடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுனர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தான் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார். இந்த நிலையில் ஆளுனரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முதல்-அமைச்சர் சித்தராமையா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க நீதிபதியிடம் முறையிட்டனர். அப்போது தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற மூத்த வகீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் சித்தராமையா சார்பில் ஆஜராகி வாதாடுகின்றனர்..