LOADING

Type to search

சினிமா

கோட் படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி

Share

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வெளியீடுக்கும் தயாராகவுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

படத்திற்கு தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் புகைப்படத்தை படட்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.