“இந்தியப் பிரதமரே வருக” தமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நியுயோர்க் நகரில் வரவேற்கக் காத்திருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினர்
Share
எதிர்வரும் செப்டம்பர் 22ம் திகதி அமெரிக்காவிற்கு வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழர் அமைப்பான ‘வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை’ இயக்குனர் சபையும் பொது மக்களும் ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள் என அறியப்பெறுகின்றது.
இது தொடர்பாக மேற்படி அமைப்பினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உயர்வெனக் கொட்டு முரசே, நல்ல ஓய்வறியாத் தமிழர்கள் வாழ்வு அமெரிக்காவில் உயர்கவென்று கொட்டு முரசே! வட அமெரிக்காவெங்கும் பரந்து விரிந்திருக்கும் எம் தமிழுறவுகள் அனைவருக்கும் வணக்கம்!!
இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள், ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வர உள்ளார். அவருடைய அமெரிக்கப் பயணத்தின் ஒரு நிகழ்வாக, நியூயார்க் பெருநகரில் இந்தியநாட்டு வம்சாவளி மக்களைச் சந்திக்கும் பண்பாட்டு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியநாட்டுத் தலைமை அமைச்சர் மாண்புமிகு மோடி அவர்களை வரவேற்றுச் சிறப்பித்திடவும், இந்திய அயலகத்துறை, தூதரகம், தொழிற்துறை, கலை இலக்கியப் பண்பாட்டுத் துறை சார்ந்தவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு பேரவைக்கும் தமிழுறவுகளுக்குமான மேன்மைகளுக்கு வழிகோலவும் இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
செப்டம்பர் 22ஆம் நாள் நிகழவிருக்கும் சீர்மிகுவிழாவில் கலந்து கொள்ள விழைவோர், சிறப்பு நுழைவுச்சீட்டு பெற்றிட, செப்டம்பர் 11ஆம் நாள் இரவு கிழக்கு நேரம் 11:59 PM மணிக்குள் கீழ்க்கண்ட படிவத்தில் பதிந்திடுமாறு வேண்டுகின்றோம்.
https://forms.gle/WBshYUnApeotk6gG9
நம் பேரவையானது, பாரதப் பிரதமரை வரவேற்பதில் மிகவும் அக்கறை கொள்கின்றது. நியூயார்க் நகரில் இடம் பெறவுள்ள சிறப்புமிகு விழாவில், நம் தமிழ்ச்சங்கத்தார், உற்றார் உறவினர் நண்பர்களோடு கலந்து கொண்டு, இந்தியப் பிரதமர் அவர்களை வரவேற்றுச் சிறப்புச்செய்திடக் கூடிடுவோம்.”
Date/Venue info
Sunday, September 22, 2024 at 9:30 AM
Nassau Veterans Memorial Coliseum,
1255 Hempstead Turnpike,
Uniondale, NY 11553.
More details: https://modiandus.org/
Greetings! We are excited to announce that the Prime Minister of India, Hon’ble Narendra Modi, will be visiting the United States to attend the United Nations General Assembly. As part of his visit, a special cultural event has been organized in New York City to connect with the Indian diaspora.
This is a unique opportunity to welcome Prime Minister Modi and interact with dignitaries from the Indian Embassy, Industry, Arts, Literature, and Culture Departments. It also serves as a platform to showcase the excellence of FeTNA and the Tamil community.
To participate:
Please fill out the form linked below by September 11, 2024, at 11:59 PM EST to receive a special entry ticket.
https://forms.gle/WBshYUnApeotk6gG9
FeTNA looks forward to warmly welcoming the Prime Minister and celebrating this momentous occasion. We encourage you to attend with your family and friends to make this event truly memorable.
For updated details on the program, special accommodations, and more, please visit: www.ModiandUs.org.
வாழ்க தமிழ், வாழிய தமிழர்நலம்!
செயற்குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.