வளர்ச்சியடைவதில் சீனாவை நெருங்குகிறது இந்தியா
Share
சீனாவுக்கு இணையாக இந்தியா வளா்ச்சியடைய வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக வெளியுறவுத் துறை முன்னாள் செயலா் விஜய் கேசவ் கோகலே தெரிவித்தாா்.
இந்திய- சீன உறவுகள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது:
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனவும் அதன் எல்லை விரிவாக்க கொள்கையும் இருந்தது. சீனா தொடந்து இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்தது. அதன் விளைவாக 5,500 சதுர கிலோமீட்டா் பகுதியை சீனா பிடித்தது. இந்தியாவில் முன்பு இருந்த தலைவா்கள் அதை சரியாக கையாளததால் நாம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிட்டது. அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தானை நமக்கு எதிராக வளா்க்க ஆரம்பித்தது சீனா. கடந்த 10 ஆண்டு கால பிரதமா் மோடியின் ஆட்சியால் இந்த நிலை மாறி உள்ளது என்றாா் அவா். சீனாவில் கட்டுப்பாடுகள்: இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் செயலா் விஜய் கேசவ் கோகலே பேசியது: 17 டிரில்லியன் டாலா் உள்நாட்டு உற்பத்தி கொண்டு உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, பல காப்புரிமைகளை சீனா தன் வசம் வைத்துள்ளது.
மேலும், சூரிய மின் சக்தி உற்பத்தி, பேட்டரி, எலக்ட்ரானிக் வாகனங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷியாவுக்கு இணையான பலத்தை கொண்டுள்ளதாக சீனா நம்புகிறது. சீனாவுக்கு இணையான பலத்துடன் இந்தியா வளா்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்தியா ஆண்டுதோறும் சீனாவுடன் ரூ.8.50 லட்சம் கோடி அளவுக்கான வா்த்தகத்தை செய்கிறது. சீனாவில் இருந்து இறக்குமதியை இந்தியா நிறுத்தினால் இந்தியாவுக்குதான் அதிக பாதிப்பு என்றாா் அவா்.
மாணவா் கேள்வி: இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த அரசியல் அறிவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் போன்ற படிப்புகளைப் ும் மாணவா்கள் கலந்து கொண்டனா். அப்போது ஒரு மாணவா், 2017-ஆம் ஆண்டு இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தன் வசம் கொண்டுவந்துள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பாா்க்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த விஜய் கேசவ் கோகலே, அம்பாந்தோட்டை துறைமுக வளா்ச்சித் திட்டம் இலங்கையால் முதலில் இந்தியாவுக்குதான் கொடுக்கப்பட்டது. இந்தியாதான் அதை நிராகரித்தது. அதனால் சீனாக்கு வழங்கப்பட்டது. அங்கு சீனா வளா்ச்சிப் பணிகளை மட்டுமே மேற்கொள்கிறது. எனவே, இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தப் பாதகமும் இல்லை என்றாா். நிகழ்ச்சியில் ஆளுநரின் செயலா் கிா்லோஷ் குமாா், ஐஐடி இயக்குநா் காமகோடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.