LOADING

Type to search

சினிமா

கமல்ஹாசன் படத்தில் நடித்ததால் நஷ்டம் அடைந்ததாக நடிகர் சத்யராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார்

Share

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பிறகு கதாநாயகனாக வெற்றி பெற்ற நடிகர்கள் பலர் உண்டு. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வில்லனாக நடித்தவர்தான். அதேபோல் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், நெப்போலியன் போன்றவர்களும் வில்லனாக நடித்து பிறகு கதாநாயகனாக மாறியவர்கள்தான்.

வில்லன் நடிப்பிலேயே அவர்கள் ரசிகர்களை கவர்ந்து விட்ட நிலையில் கதாநாயகனாகவும் வெகு எளிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று விடுகின்றனர். அதில் 1980களில் நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் முக்கிய வில்லனாக பல படங்களை நடித்து இருக்கிறார். குறிப்பாக கமல் கதாநாயகனாகவும் சத்யராஜ் வில்லனாகவும் நடித்த பல படங்கள் 1980 களில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடலோரக் கவிதைகள் படத்தில் கதாநாயகனாக நடித்த சத்யராஜ் அந்த படம் பெற்ற அபார வெற்றியைத் தொடர்ந்து, பல படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகன் வாய்ப்பு இல்லாமல், சத்யராஜ் குணச்சித்திர வேடங்களில், கதாநாயகி கதாநாயகனுக்கு அப்பா வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவர் நடித்த படங்களில் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இப்போது கூலி படத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ். இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் மிஸ்டர் பாரத். அதன்பிறகு மீண்டும் கூலி படத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.

நடிகர் சத்யராஜ் கூறுகையில், முதல் முறையாக நடிகர் கமலுடன் காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்தேன். அதில் கமல் கதாநாயகனாகவும் நான் வில்லனாகவும் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. நான் முக்கிய வில்லனாக முதல் முறையாக நடித்தது காக்கிச்சட்டை படம்தான். அந்த படத்தின் இயக்குனர் உங்களுக்கு கராத்தே தெரியுமா என்று கேட்டார். நான் உடனே பிரவுன் பெல்ட் வாங்கியவன் என்று கூறிவிட்டேன். எப்படியும் படப்பிடிப்பு துவங்க ஒரு மாதம் ஆகிவிடும். அதற்குள் கராத்தே கற்றுக் கொள்வோம் என்று நான் அப்படி சொல்லி விட்டேன். ஆனால் இயக்குனர் நாளைக்கே ஷூட்டிங் என்று என்னிடம் சொல்லிவிட்டார். அதனால் கமலை அவரது வீட்டில் போய் பார்த்து விஷயத்தை சொன்னேன். உடனே அவர் சண்டை இயக்குனரை அழைத்து சினிமா சண்டையில் எப்படி நடிப்பது என்பது குறித்து எனக்கு பயிற்சி தந்தார். அதன் பின் தான் காக்கிச்சட்டை படத்தில் நான் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 500 ரூபாய். ஆனால் சண்டைக்காட்சி நடிக்கும் போது என் கையில் கட்டியிருந்த வாட்ச் உடைந்து விட்டது. அதன் விலை 650 ரூபாய். அதனால் கமல் படத்தில் வில்லனாக நடித்ததால்ல் எனக்கு 150 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்று சொல்லி அவரது பாணியில் ஜாலியாக கூறியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.