LOADING

Type to search

சினிமா

பிரிந்துபோன அதிமுகவினர் மீண்டும் இணைய நாள் குறித்த எம்எல்ஏ

Share

வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் அதிமுக மீண்டும் ஒன்றிணையும் என்று, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று தஞ்சையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வைத்திலிங்கம் எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம் அதிமுக. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

அதிமுகவின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான். என்னை விட அதிமுக வரலாறை பற்றி யாருக்கும் பேச தகுதி இல்லை. ஒரு சிலர் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு என்பது தொண்டர்களால் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் கட்சியின் அந்த விதியை மாற்றி எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்ந்தெடுத்து உள்ளார். நான் பலமுறை அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் அதிமுக மீண்டும் ஒன்றிணையும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.ஆனால் இப்போது அதனை மாற்றிக் கொள்கிறேன். நிச்சயமாக வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் கண்டிப்பாக அதிமுக மீண்டும் ஒன்றிணையும். வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைவது உறுதி” என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.