LOADING

Type to search

இந்திய அரசியல்

21-ம்தேதி டில்லி முதல்-அமைச்சராக பதவியேற்கிறார் அதிஷி?

Share

புதிய முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  டில்லி முதல்-அமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்-அமைச்சர் அலுவலகம் செல்லக் கூடாது. முதல்-அமைச்சராக கோப்புகளை கையாளக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இதனால் முதல்-அமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டில்லியின் புதிய முதல்-அமைச்சராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் டில்லி துணை நிலை ஆளுனரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்-அமைச்சராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அதிஷியும் ஆளுனரிடம் கொடுத்தார். இந்நிலையில் டில்லி துணை நிலை ஆளுனர் வி.கே.சக்சேனா, அதிபர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.