குவாட் உச்சி மாநாடு – பிரதமர் மோடி பதிவு
Share
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் விலிமிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். இந்நிலையில் குவாட் உச்சி மாநாட்டில் தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், “டெலாவேர், வில்மிங்டனில் உச்சி மாநாட்டின் போது குவாட் தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. மேலும் உலகளாவிய நலனுக்காக குவாட் எவ்வாறு தொடர்ந்து பணியாற்ற முடியும் என்பதில் கவனம் செலுத்தும் விவாதங்கள் பயனுள்ளதாக இருந்தன. சுகாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்” என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.