LOADING

Type to search

சினிமா

மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’ பட பதாகை

Share

மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெய்பீம், குட் நைட் உட்பட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். அவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும், ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். திரைக்கதை, வசனத்தைப் பிரசன்னா பாலச்சந்திரன் எழுதியுள்ளார். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைக்கிறார். சான்வி மேக்னா நாயகியாக நடிக்கிறார். குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்துக்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பஸ்தனாக பல்வேறு வேலைகளை செய்யும் மணிகண்டனின் வேலைப்பளுவை குறிப்பிடும் வகையில் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டது பதாகை. ‘குட்நைட்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஃபேமிலி ஆடியன்ஸை நோக்கி திரும்பியுள்ளார் மணிகண்டன்.