LOADING

Type to search

இந்திய அரசியல்

சிதம்பரம் நடராஜர் கோவில் நிலங்களை மீட்க உத்தரவு

Share

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தது. நிலம் விற்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பொது தீட்சகர்கள் முறையாக பராமரிக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலங்களை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி, 12 வாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.