LOADING

Type to search

இந்திய அரசியல்

கோவில் நில மோசடி வழக்கில் துணை ஆட்சியர் அதிரடியாக கைதானார்

Share

காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில், ஏற்கனவே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்ததற்கு இடைதரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலை ராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையாளர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் உள்ளிட்டரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் இந்த நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு மனை பட்டா வழங்குவதாக கூறி, கோவில் இடத்தை மோசடி செய்து விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் இடம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து 15 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், துணை ஆட்சியர் ஜான்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே புதுச்சேரியின் ஆளும் கட்சியான என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காரைக்கால் பிரமுகர் ஜேசிபி ஆனந்த் உள்ளிட்டோர் மீதும் இந்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.