LOADING

Type to search

உலக அரசியல்

இந்தியா அதிகமாக வரி வசூலிக்கிறதென்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்

Share

வாஷிங்டன்: ” இந்தியா உள்ளிட்ட பெரிய நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது அதிகம் வரி விதிக்கின்றன. நான் அதிபராக பதவியேற்றால் அந்நாடுகளின் பொருட்களுக்கு அதிகம் வரி விதிப்பேன்,” என குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.டெட்டராய்ட் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக்குவதே எனது திட்டம். நாம் அதிகம் வரிவிதிப்பதில்லை. ஆனால் அமெரிக்க பொருட்களுக்கு சீனா 200 சதவீதம் வரி விதிக்கிறது. பிரேசில் அதிகம் வரி விதிக்கிறது. ஆனால், அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது.இந்தியாவுடன் நமக்கு சிறந்த உறவு உள்ளது. முக்கியமாக பிரதமர் மோடியுடன் உள்ளது. அவர் சிறந்த தலைவர். சிறந்த நபர். உறவை நெருக்கமாக கொண்டு வந்து சிறந்த பணியை செய்துள்ளார். இருப்பினும் வரி அதிகம் . சீனாவை காட்டிலும் அதிகம் வரி விதிக்கின்றனர். முன்பு நான் அதிபராக இருக்கும் போது விஸ்கான்சின் நகரில் இருந்து செயல்படும் ஹார்லே டேவிட்சன், நிறுவனத்தினர் என்னை சந்தித்த போது, இந்தியா 150 சதவீதம் வரி விதிப்பதாக தெரிவித்தனர். நான் அதிபராக வெற்றி பெற்றால், அமெரிக்க பொருட்களுக்கு விரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை கொண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.