LOADING

Type to search

சினிமா

யோகி பாபு நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தின் முன்னோட்டம்

Share

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மண்டேலா’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘போட், தி கோட், டீன்ஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். யோகிபாபு ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ‘சகுனி’ படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் யோகி பாபு நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.