டில்லி சட்டசபை தேர்தலில் 981 வேட்பாளர்கள் போட்டி
Share
டில்லி சட்டசபை தேர்தல் களத்தில் 981 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
டிடெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு இதுவரை 981 வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என டில்லியின் தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதன்படி, மொத்தம் 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற 20-ந்தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 680 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இவற்றில் டில்லி தொகுதியில் அதிக அளவிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்படி மொத்தம் 29 வேட்பாளர்கள் 40 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சருமான கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில், முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோன்று கஸ்தூர்பா நகர் தொகுதியில், குறைந்த அளவிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.