LOADING

Type to search

உலக அரசியல்

ஈரான்: உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு; 2 நீதிபதிகள் உயிரிழப்பு

Share

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முகமது மொஹிசா, அலி ரசானி செயல்பட்டு வந்தனர். இரு நீதிபதிகளும் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள ஓய்வெடுக்கும் அறையில் இருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் நீதிபதிகளை குறிவைத்து கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் நீதிபதிகள் மொஹிசா, அலி ரசானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் நீதிபதிகளின் பாதுகாவலரும் படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தீவிர அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்கள் என்பதும், சமூக ஆர்வலர்கள், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை கொடுப்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஈரான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.