LOADING

Type to search

சினிமா

விடுதலை 2 படம் ஓ.டி.டியில் வெளியீடு

Share

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை 2’. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் சேத்தன், கென் கருணாஸ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘விடுதலை 2’ படம் ஓ.டி.டி.யில், திரையரங்குகளில் இடம்பெற்ற காட்சிகளை விட ஒரு மணிநேரம் கூடுதலாக வெளியாகும் என இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இப்படத்தின் ஓடிடி வெளியீடு எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். முன்னதாக இப்படம் ஜீ 5 தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருந்தநிலையில், அமேசான் பிரைம் காணொளியில் வெளியாகி இருக்கிறது.