LOADING

Type to search

இந்திய அரசியல்

உண்மையான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு விரும்பவில்லை – பிரியங்கா காந்தி

Share

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், அதிபர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார். அதன்பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது, உண்மையான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் கடைசி கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது, அதில் எந்த விவாதமும் நடக்கவில்லை. பிரச்சினைகளுக்கான சரியான பதில்களை மத்திய அரசு வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.