பாகிஸ்தானில் 20 போராளிகள் கைது – 6 கிலோ வெடி மருந்து பறிமுதல்
Share

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக எல்லையோர மாகாணங்களில் அடிக்கடி அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறை அங்கு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 6 கிலோ வெடி மருந்து, 20 வெடிகுண்டு போன்றவை கைப்பற்றப்பட்டன. இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.