LOADING

Type to search

சினிமா

நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ பட காணொளி வெளியீடு

Share

முன்னணி நடிகராக இருப்பவர் நானி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’, ‘தசரா’ , ‘ஹாய் நான்னா’, ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஆகிய திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன. தற்போது இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் ‘ஹிட் 3’ படத்தில் நானி நடித்து வருகிறார். சமீபத்தில் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் ‘தி பாரடைஸ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் மார்ச் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ‘தி பாரடைஸ்’ படத்தின் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.