LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் ‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கு இரண்டு அரச கௌரவங்கள்

Share

அவரை தனது உத்தியோகபூர்வ இருக்கையில் மகிழ்ச்சியுடன் அமரச் செய்த ஒன்றாரியோ மாநகர முதல்வர் டக் போர்ட்……

அவரது பெயரில் மார்க்கம் நகரசபை எல்லைக்குள் ஒரு வீதிப் பலகையை திறந்து வைத்த மார்க்க நகரசபை மேயர் பிராங்க் ஸ்கெபட்டி……

(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

கடந்த வாரம் கனடாவிற்கான இசைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்த ‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கு இரண்டு அரச கௌரவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதை கனடா வாழ் இந்திய மற்றும் இலங்கை மக்கள் பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களை தனது குயின்பார்க் அலுவலகத்திற்கு அழைத்து தனது உத்தியோகபூர்வ இருக்கையில் மகிழ்ச்சியுடன் அமரச் செய்து பெருமையுடன் அவரைப் பாராட்டினார் ஒன்றாரியோ மாநகர முதல்வர் டக் போர்ட். இதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் ஒன்றாரியோ மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் ஆவார் இந்த நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மேலும் அவரது பெயரில் மார்க்கம் நகரசபை எல்லைக்குள் ஒரு வீதிப் பலகையை திறந்து வைத்தார் மார்க்க நகரசபை மேயர் பிராங்க் ஸ்கெபட்டி. அத்துடன் அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார் மேயர் அவர்கள்.இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று காலை மார்க்கம் நகரில் நடைபெற்றது

மார்க்கம் நகரில் மாநகர சபை எல்லைக்குள்ள ஒரு பகுதியில் வீதி ஒன்றுக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மார்க்ம் மாநகர மேயர் பிராங்க் ஸ்காபெட்டி மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். அங்கு உரையாற்றும் போது ‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் தனது வாழ்வில் இவ்வாறான ஓர் கௌரவிப்பு கிடைக்கும் என கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது என தெரிவித்தார்

மார்க்ம் மாநகர மேயர், இந்திய உதவித் தூதுவர் அபூர்வா ஶ்ரீவட்சவா மற்றும் கனேடிய மக்களுக்கு நன்றி பாராட்டுவதாகவும் ‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனது இசைத் துறைப் பயணத்தில் இந்தியாவில் தன்னுடன் இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றி பாராட்டிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.. இசை சமுத்திரத்தில் தான் ஒர் துளி மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான விடயங்கள் மூலம் தாம் இன்னமும் ஊக்கப்படுத்தப்படுவதாகவும் இன்னும் பொறுப்புக்கள் அதிகரிப்பதாகவும், களைப்படைந்தாலும் மக்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் எஞ்சியிருப்பதாக நினைவூட்டப்படுவதாகவும் அவர் தனது முகநூல்ப் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.