LOADING

Type to search

இந்திய அரசியல்

பெரியாரைப்பாராட்டி விஜய் கருத்து: இழிவாக விமர்சித்த பாஜக பெண் ஆதரவாளர் கைது

Share

பெரியாரைப்பாராட்டி விஜய் கருத்து வெளியிட்டு இருந்ததை இழிவாக விமர்சித்த பாஜக பெண் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). இவர் பாரதீய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். சமூக வலைதளங்களில் பாரதீய ஜனதா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

அதேசமயம் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியினர் பற்றி அவதுறான கருத்துக்களையும் பதிவிட்டார். சில நாட்களு’கு முன் நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மத்தியில் பெசும்போது, பெரியாரைப் படியுங்கள் என்று குறிப்பிட்டார். இதை விமர்சித்த உமா கார்கி, பெரியாரையும், விஜய்யின் கருத்தையும் மிகவும் இழிவாக ஒப்பிட்டு கருத்துப்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் அந்த புகாரை அளித்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, கோவை காளப்பட்டியில் பா.ஜ.க. சமூக வலைதள செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறந்த சமூக வலைதள செயல்பட்டாளருக்கான விருது உமா கார்கிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வழங்கி உமா கார்கியை கவுரவித்தார். விருது பெற்ற மறுநாளிலேயே உமா கார்கி, கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.