LOADING

Type to search

இந்திய அரசியல்

கொங்கு மண்டலத்தில் மாநாடு… விரைவில் தேதி அறிவிக்கப்படும் – ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

Share

கொங்கு மண்டலத்தில் உறுதியா மாநாடு நடைபெறும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், பண்ரூட்டி ராமச் சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘செல்லுகின்ற இடமெல்லாம் நம் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள் அவர்கள் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி அரசு கவிழக்கூடிய சூழல் இருந்தது. நாம் ஆதரவு அளிக்காவிருந்தால் அன்றே கவிழ்ந்திருக்கும். ஜெயலலிதா விட்டு சென்ற ஆட்சி கவிழக் கூடாது என்பதாலேயே ஆதரவு அளித்தோம். ஆனால் அந்த நான்கரை வருடத்தில் எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ செய்துவிட்டனர். கடைசியாக சர்வாதிகார போக்கில் நம்மையே வெளியேற்றி விட்டனர்.

இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வருபவர்கள் அடிப்படைத் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அடிப்படை தொணடர்களுக்கு எம்ஜிஆர் வழங்கிய உரிமையை அவர்கள் பறித்துவிட்டனர். தற்போது சட்டப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் நமக்கு அளித்த உரிமையை பறிக்க இந்த பழனிசாமி யார்? பழனிசாமி குழுவினர் முடிவுகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் தர்மத்தின் படி, நியாயத்தின் படி நடந்துக் கொண்டிருக்கிறோம்.

எந்த சூழல் வந்தாலும் என்னுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் தான் என்னுடைய மன தைரியம், என்னுடைய மன வலிமை நீங்கள் தான். கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். கூடிய விரைவில் தேதி அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு கற்பித்து விட்டனர்.

இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தை தொண்டர்களாகிய உங்களுக்கு அளிக்கிறேன். அடுத்து மாநாடு கொங்கு மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய, மாவட்டச் செயலாளருடன் கலந்து பேசி இருக்கிறோம். விரைவில் தேதி அறிவிக்கப்படும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. கூட்டணி தேர்தல் ஜுரம் வரும்பொழுது பேசப்படும்’ என்று தெரிவித்தார்.