LOADING

Type to search

இந்திய அரசியல்

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தில் விரிசல்

Share

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் 67 லட்சம் ரூபாய் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட உள்ளது. பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திகழ்கிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும், தினமும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், 67 லட்சம் ரூபாய் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட உள்ளது. ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் கூறுகையில், கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டவுடன், நன்கொடையாளர்களிடம் வசூல் செய்து, மராமத்து பணி துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் இல்லாததால், அறநிலையத்துறை நிதியில் இருந்து, 67 லட்சம் ரூபாய் செலவில், மராமத்து பணி மேற்கொள்ள உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்படும், என்று ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.