மதுரை மாநாட்டுக்கு 4000 அ.தி.மு.க.வினர் பயணம் – கே.பி.கந்தன் தகவல்
Share
மதுரையில் அ.தி.மு.க. மாநில எழுச்சி மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் திரளுகிறார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கு இணங்க சென்னை புறநகர் மாவட்டத்தில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்வது மற்றும் முன்னேற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் மாநாட்டையொட்டி கல்வெட்டுகள், கட்சி கொடிக்கம்பங்கள் நடவும், சுவர் விளம்பரங்கள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் செல்ல கார், பேருந்து, வேன் ஏற்பாடு செய்யப்படுகிறது. ரெயில்களிலும் செல்கிறார்கள். மாநாட்டை வரவேற்று லோகோவுடன் கூடிய ஆட்டோ அட்டை, கை கடிகார அட்டைகள், கைபேசி அட்டைகள் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது என்றார்.













