LOADING

Type to search

இந்திய அரசியல்

உ.பி.யில் 79 தொகுதிகள் நாங்கள் தான் வெற்றி – அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

Share

உத்தர பிரதேசத்தில் இந்த முறை 79 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்’ என சமாஜ்வாதி கட்சி தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உ.பியில் உள்ள 80 தொகுதிகளில், 63 தொகுதியில் சமாஜ்வாதி கட்சியும், மீதமுள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் இந்த முறை 79 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே போட்டி நிலவுகிறது.

பா.ஜ.வின் அரசியலை இன்று யாரும் விரும்பவில்லை. இந்தியா முழுவதும் இண்டியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெல்லும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் பிரதமர் யார் என்பதை, நம் எம்.பி.,க்கள் முடிவு செய்வார்கள். இந்தத் தேர்தல் நமது எதிர்காலத்திற்கான தேர்தல். ஒருபுறம், சிலர் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார்கள். மறுபுறம், இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் அரசியலமைப்பைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். இந்தியா கூட்டணியை தவிர வேறு யாருக்கும் ஓட்டளித்து தங்கள் ஓட்டுகளை வீணாக்காதீர்கள் என பகுஜன் சமாஜ் கட்சியினரை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.