LOADING

Type to search

இந்திய அரசியல்

திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரம் உள்வாங்கிய கடல் – மக்கள் பீதி

Share

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு உள் வாங்கியது.

    திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு உள் வாங்கியது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 400 மீட்டருக்கு கடல் உள்வாங்கி உள்ளது. கடல் உள்வாங்கியதால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வழக்கமாக அமாவாசை மற்றும் பௌா்ணமி நாட்களில் கடல் நீர் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்த திதி நாட்களுக்கு முந்தைய சில நாட்கள், பிந்தைய சில நாட்களில் காலை கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அமாவாசை என்பதால் திருச்செந்தூர் கோயில் பகுதியில் கடல் நீரானது உள்வாங்கியது. இதனால், கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. முன்னதாக கடந்த மாதம் 22ஆம் தேதி கடல் நீரானது உள் வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் உள் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.