LOADING

Type to search

உலக அரசியல்

ஷேக் ஹசீனாவின் கடப்பிதழ் ரத்து – வங்காளதேச அரசு நடவடிக்கை

Share

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் 30 சதவீத இடஒதுக்கீ்ட்டிற்கு எதிராக போராட்டம் வெடித்தது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நெருக்கடி அதிகரித்ததால், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அதே நாளில், நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து, வங்காளதேசத்தில் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக கடப்பிதழ்களை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்தது. ஷேக் ஹசீனாவின் அமைச்சரவையில் இருந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரின் கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது.