LOADING

Type to search

உலக அரசியல்

நாா்வே நாட்டில் ஆப்கனின் தூதரகம் மூடல்

Share

பிரிட்டனைத் தொடா்ந்து நாா்வே தலைநகா் ஓஸ்லோவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகமும் வியாழக்கிழமை (செப். 12) மூடப்படுகிறது. இது குறித்து அந்த நாட்டுக்கான ஆப்கன்&ரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓஸ்லோ நகரில் செயல்பட்டுவரும் ஆப்கன் தூதரகம் வியாழக்கிழமை மூடப்படுகிறது. அந்தத் தூதரகக் கட்டடம் (படம்) நாா்வே வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். தூதரகம் மூடப்பட்டாலும், ஆப்கனின் மனித உரிமைகள், பன்முகத்தன்மை மற்றும் அமைதிக்காக செயல்படுவோம் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லண்டனில் செயல்பட்டுவரும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் அதிகாரிகளை தலிபான் ஆட்சியாளா்கள் பணி நீக்கம் செய்துள்ளதால் அந்தத் தூதரகம் இந்த மாதம் 27-ஆம் தேதி மூடப்படுவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினா் வெளியேறியதைத் தொடா்ந்து அந்த நாட்டை தலிபான்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் கைப்பற்றினா். எனினும், அவா்களின் அரசை பிரிட்டன், நாா்வே உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கவில்லை.அந்த நாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்களில், தலிபான்களுக்கு முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே தொடா்ந்து செயல்பட்டுவருகின்றனா்.இந்தச் சூழலில், முந்தைய அரசுடன் தொடா்புடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கன் தூதரகங்களுடன் தொடா்பைத் துண்டிப்பதாக தலிபான் ஆட்சியாளா்கள் கடந்த ஜூலை மாதம் அறிவித்தனா்.

பிரிட்டன், ஜொமனி, பெல்ஜியம், ஸ்விட்சா்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், போலந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், கனடா, நாா்வே ஆகிய நாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்கள் விநியோகிக்கும் நுழைவு இசைவுகள் (விசா) இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தலிபான்கள் கூறினா்.அதன் தொடா்ச்சியாக, ஓஸ்லோ மற்றும் லண்டனில் உள்ள ஆப்கன் தூதரகங்கள் அடுத்தடுத்து மூடப்படுகின்றன.