LOADING

Type to search

இந்திய அரசியல்

ஸ்டாலின் முயற்சியின் பயனாக ஃபோர்டு கார் நிறுவனம. மீண்டும் சென்னையில் உற்பத்தியை தொடங்குகிறது

Share

ஃபோர்ட் மோட்டார் கம்பெனி தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கார் உற்பத்தியை நிறுத்தி வெளியேறிய அந்த நிறுவனம் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு மீண்டும் தமிழகத்தில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருப்பதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 17 நாள் சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 27 ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு இன்று புறப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து அவர் விமானம் மூலம் துபாய் வழியாக சென்னை வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மொத்தம் 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது கையெழுத்தாகி உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது அமெரிக்காவில் ஃபோர்டு மோட்டர் எனும் கார் நிறுவனத்தில் உயரதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் (Ford Motor) நிறுவனம் என்பது தமிழகத்துக்கு ஒன்றும் புதிது இல்லை. இந்த நிறுவனம் சென்னை மறைமலை நகரில் செயல்பட்டு வந்தது. இங்கு தயாரிக்கப்படும் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு முதல் அந்த நிறுவனம் சென்னை தொழிற்சாலைகளில் கார் தயாரிப்பை நிறுத்திவிட்டது. அதன்பிறகு கார் ஏற்றுமதியை 2022ம்ஆண்டு முதல் நிறுத்தியது. இந்நிலையில் தான் 3 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் தயாரிப்பை தமிழகத்தில் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்நிலையில் தான் ஃபோர்ட் மோட்டார்ஸ் சார்பில் பாசிட்டிவான முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் கார் தயாரித்து மீண்டும் ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தமிழக அரசிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை தொடர்பாக அந்த நிறுவனம், ”உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான கார் உற்பத்தியை மேற்கொள்ள இந்த பேச்சுவார்த்தை என்பது முக்கியமானதாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளது. இதன்மூலம் மீண்டும் தமிழகத்தில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி தொடங்குவதற்கான சாத்தியமான அறிகுறி தென்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.