LOADING

Type to search

உலக அரசியல்

ரூ.19,000 கோடி செலுத்த வங்கதேசத்திற்கு ரஷ்யா கிடுக்கிப்பிடி செய்துள்ளதால் உலக நாடுகள் பதற்றமடைந்துள்ளன

Share

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையே ஒரு புறம் போர் நடந்து வரும் சூழ்நிலையில் அதன் பொருளாதார தேவை காரணமாக கடன் கொடுத்திருக்கும் நாடுகளுக்கு நெருக்கடி தரத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்திற்காக ரஷ்யா, ரூப்பூர் அணுமின் நிலையத்திற்காக வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியாக ரூ.19,000 கோடி வங்கதேசம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இன்று செப்டம்பர் 15ம் தேதிக்குள் இந்தத் தொகையை செலுத்த வேண்டும் என கெடு விதித்துள்ளது. இந்தக் கடன் தொடர்பான ஒப்பந்தம் 2015ல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது வங்கதேசம் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் இருப்பதால், இந்தப் பணத்தைச் செலுத்தும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது. வங்கதேசம் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்த போதிலும் ரஷ்யா அதை மறுத்துவிட்டது. இந்த சூழ்நிலையில், வங்கதேசம் கடன் தொகையை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து பெரும் கவலையுடன் இருந்து வருகிறது. இச்சம்பவம், இரண்டு நாடுகளின் பொருளாதார உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் பொருளாதார நிலை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.