LOADING

Type to search

இந்திய அரசியல்

மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு – பொதுக்குழுவில் தீர்மானங்கள்!

Share

மநீம பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் அக்கட்சியின் நிரந்தர தலைவர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மநீம 2-வது பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அத்துடன் கட்சி நிர்வாகிகள், 1414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2570 பேர் கலந்து கொண்டனர். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் முதல் பொதுக் குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுபோன்ற 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் வருமாறு, பொதுக்குழுவில் மீண்டும் நிரந்தர தலைவராக கமலஹாசன் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவில் தீர்மானம். தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக பூத்திற்கு குறைந்தது 5 பேரை நியமிக்க வேண்டும். மக்கள் நீதி மய்ய புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் பொதுக்குழுவில் தீர்மானம். பொதுக்குழுவில் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத்திலும் வருகின்ற ஜூன் மாதத்திற்குள் 5 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற உள்ளது. மநீம கட்சியின் புதிய பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்வானவர்கள், அர்ப்பணிப்புடன் உழைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வார்கள். அவர்களது பணி சிறக்க இந்த பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.