LOADING

Type to search

சினிமா

குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் ராகுல் தேவ்!

Share

நடிகர் ராகுல் தேவ் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அஜித் நடித்து வரும் “குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் சற்றுமுன் கசிந்துள்ளது. அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படம் “குட் பேட் அக்லி”.

இப்படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அஜித் தவிர நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போதைய தகவல்படி, ராகுல் தேவ் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.. இவர் ஏற்கனவே “வேதாளம்” திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து வில்லனாக நடித்தவர், இப்போது மீண்டும் இணைகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது, இதற்கான இடம் பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.