LOADING

Type to search

சினிமா

பாலிவுட் நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதி

Share

பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது ரிவால்வர் துப்பாக்கியால் அவரது காலிலேயே தவறுத்தலாக சுட்டுக்கொண்டதால் குண்டடிபட்டு படுகாயம் அடைந்துள்ள்ளார். கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 6 மணி விமானம் ஏறுவதற்கு அதிகாலை 4.45 மணியளவில் மும்பை, ஜூஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. உடனே மருத்துமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காலில் பாய்ந்த குண்டு மருத்துவர்களால் நீக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கோவிந்தாவின் மேலாளர் சசி சின்ஹா தெரிவித்துள்ளார்.