(கனகராசா சரவணன்) களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி நடத்துனர் தொலைந்துபோன் னையடக்க தொலைபேசியை பஸ்வண்டியில் தேடி போன நிலையில் அவரை பணம் திருடியதாக பொய் தெரிவித்து தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ்வண்டி உரிமையாளர், சாரதி ஆகிய இருவரையும் எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் ...
பு.கஜிந்தன் கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு லொறி வாகனத்தில் கடத்தப்பட்ட 20 மாடுகளை கடந்த திங்கட்கிழமை மீசாலைப் பகுதியில் வைத்து சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது 19மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டதுடன், வாகனச் சாரதி மற்றும் உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் ஆணையத்திடம் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கோரிக்கை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளைத் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இலங்கைத் தேர்தல்கள் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் ...