நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று 18.09.2024 நள்ளிரவுடன் நிறைவு பெற்றதை அடுத்து கிளிநொச்சியில் தருமபுரம் பொலிசார் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டவுட் மற்றும் பெனர், துண்டு பிரசுரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்காள தேசம் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா (வயது 79) நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அல்லது லண்டன் அழைத்து செல்ல மருத்துவர்கள் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே கலீதா ஜியா விமானத்தில் நீண்ட ...
லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஜ்புல்லா அமைப்பினர் செல்போன்களுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தங்களுடைய இருப்பிடம் பற்றிய விவரங்கள் வெளியே தெரிய வராது என்பதற்காக இவற்றை பயன்படுத்துகின்றனர். இவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு ...