கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்?
Share
தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ‘நடிகையர் திலகம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் ‘தெறி’ படத்தின் மறுபதிப்பான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படி மும்மரமாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியானது. 15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
இதனிடையே, கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், “எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது” என்று பதிவிட்டு இருந்தார். இதனால் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்…. எப்போ… எங்கே நடைபெறுகிறது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனையடுத்து திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தற்பொழுது வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் கலந்துக்க் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.