LOADING

Type to search

உலக அரசியல்

விமான விபத்தில் 179 பேர் பலி: மன்னிப்பு கோரினார் ஏர் நிறுவன சி.இ.ஓ.

Share

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்துகொண்டிருந்தது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தால் விமானம் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 85 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட சூழலில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இருவரைத் தவிர, விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் விமான விபத்தை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. கிம் இ-பே தெரிவித்துள்ளார். இதன்படி ஜேஜூ விமானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கிம் இ-பே, ஒரு தொலைக்காட்சி மாநாட்டின் போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் ஆழ்ந்து குனிந்து விபத்துக்கு மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமை. விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது, விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ விசாரணைக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், தலைமை நிர்வாக அதிகாரியாக நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.