LOADING

Type to search

சினிமா

மெட்ராஸ்காரன்’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி

Share

ஷேன் நிகாம் தற்போது ‘மெட்ராஸ்காரன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். சிறு சம்பவம் பெரும் பிரச்சினையாக, மாறி இருவர் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை திரில்லர் பாணியில் சொல்லும் படமாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர் விஜய்சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது.