LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லி வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்; சிகப்பு கம்பள வரவேற்பு

Share

இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, அதிபர் மாளிகையில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு, ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோடியை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு சிங்கப்பூரின் அப்போதைய அதிபர் டோனி டன் கிங் யாம், புதுடில்லிக்கு வருகைத் தந்தார். அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை.

நம் அண்டை நாடான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், ஏற்கனவே சிங்கப்பூர் துணை பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னம் கூறியதாவது: சிறிய நாடான சிங்கப்பூர் மற்றும் மிகப்பெரிய நாடான இந்தியா இடையே உறவு வலுவாக இருக்கிறது. இந்தியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான வணிக உறவுகள் செழித்து வருகின்றன. சிங்கப்பூர் பல ஆண்டுகளாக இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.