LOADING

Type to search

சினிமா

பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏடி 2 – தயாரிப்பாளர் பதிவேற்றம்

Share

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், உலகம் முழுவதும் ரூ,1,100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இதனையடுத்து, 2ம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் அஷ்வினி தத் 2ம் பாகம் பற்றிய சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘2ம் பாகத்தில் கமல்ஹாசன் அதிக நேரம் திரையில் காணப்படுவார். பிரபாஸ்-கமல் இடையேயான காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும். அமிதாப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும். தீபிகாவின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும். இரண்டாம் பாகத்தில் புது முகங்கள் வருவார்களா என்று எனக்கு தெரியாது’ என்றார்