டிரம்புடன் தொலைபேசியில் ஜின்பிங் பேச்சு
Share
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் வருகிற 20-ந் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் சீனாவின் சார்பில் அந்த நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் சீன அரசின் மூத்த தலைவர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.